என்னைவிட பிரித்விராஜுக்கே பெயர் கிடைக்கும்! - சித்தார்த்

என்னைவிட பிரித்விராஜுக்கே பெயர் கிடைக்கும்! - சித்தார்த்

செய்திகள் 18-Aug-2014 4:22 PM IST Chandru கருத்துக்கள்

‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்தும் பிரித்விராஜும் இணைந்து நடித்திருக்கிறார்கள். 1930களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ள இந்த கதைக்களத்தில் கூத்துக்கலையின் பெருமை¬யும், மேடை நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை முறையையும் படமாக்கியிருக்கிறாராம் இயக்குனர் வசந்தபாலன். இப்படத்தில் இவர்கள் இருவருக்குமே சவாலான வேடம்தான் என்றாலும், பிரித்விராஜ் நடித்திருக்கும் கேரக்டரில் வேறு யாரும் நடிக்க முடியாத அளவிற்கு சிறப்பாக செய்துள்ளதாகவும், இப்படம் வெளிவந்த பிறகு தன்னைவிட பிரித்விராஜுக்கே அதிக பெயர் கிடைக்கும் என்றும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா’ படத்திலும் ஹீரோ சித்தார்த்தைவிட, வில்லன் வேடத்தில் நடித்திருந்த பாபி சிம்ஹாவுக்கே அதிக பெயர் கிடைத்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;