இரானிய இயக்குனரின் வேண்டுகோளை நிறைவேற்றிய ரஹ்மான்!

இரானிய இயக்குனரின் வேண்டுகோளை நிறைவேற்றிய ரஹ்மான்!

செய்திகள் 18-Aug-2014 4:06 PM IST Chandru கருத்துக்கள்

வசந்தபாலன் இயக்கத்தில் பிரித்விராஜ், சித்தார்த், வேதிகா ஆகியோர் நடித்திருக்கும் ‘காவியத்தலைவன்’ படத்தின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்பாடல்களுக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இன்று நடந்த ‘காவியத்தலைவன்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ‘‘சமீபத்தில் இரானிய இயக்குனர் மஜித் மஜிதி அவர்களை நான் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘தற்போது நீங்கள் இசையமைக்கும் பாடல்களெல்லாம் வெஸ்டர்ன் ஸ்டைலிலேயே இருக்கின்றதே... உங்கள் மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இசையமைக்கலாமே’ என்றார். இந்த ‘காவியத்தலைவன்’ ஆல்பம் அவரின் கேள்விக்கு பதிலாக இருக்கும்’’ என்றார்.

இந்த ஆல்பத்தில் மறைந்த கவிஞர் வாலி எழுதிய ‘அல்லி அர்ஜுனா...’ என்ற 10 நிமிட பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதோடு நீண்ட நாட்கள் கழித்து பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் ‘திருப்புகழ்’ பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;