‘கத்தி’யில் ஆச்சர்யங்கள் பல! - அனிருத்

‘கத்தி’யில் ஆச்சர்யங்கள் பல!  - அனிருத்

செய்திகள் 18-Aug-2014 3:07 PM IST VRC கருத்துக்கள்

பெரும் பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் தயாராகி வரும் படம் விஜய்யின் ‘கத்தி’. ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் விஜய்யுடன் முதன் முதலாக இணைந்துள்ள இசை அமைப்பாளர் அனிருத், இந்தப் படத்திற்காக ஸ்பெஷல் ட்யூன்களை உருவாக்கியிருக்கிறாராம். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருப்பதில், ‘‘கத்தி’ படத்திற்கான பாடல்களின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் இசையில் ரசிகர்களுக்கு நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது. விஜய் சார் பாடவிருக்கும் பாடலும் ரெடியாகி விட்டது. அந்தப் பாடலின் பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். ‘கத்தி’ பாடல் வெளியீட்டு விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) இராண்டாம் வாரத்தில் நடைபெறவிருக்கிறது. ‘கத்தி’யின் மொத்த இசையையும் உங்களிடம் சமர்ப்பிக்க ‘கத்தி’ படக் குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள், காத்திருங்கங்கள்…’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;