இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தில் அஜித்!

இதுவரை யாரும் தொடாத கதைக்களத்தில் அஜித்!

செய்திகள் 18-Aug-2014 2:36 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயகத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படத்தைத் தொடர்ந்து ‘வீரம்’ சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் அஜித். தொடர்ந்து கோட், சூட், பைக் சேஸிங், கன் என சுத்திக் கொண்டிருந்த அஜித்தை ‘வீரம்’ படத்தில் வேட்டி, சட்டை, அரிவாள், மாட்டு வண்டி என டோட்டலாக மாற்றிக் காட்டி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார் சிவா. இதனால் இவரின் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கும் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் எழுந்துள்ளது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள சிவா, ‘‘அஜித் படத்திற்கான கதையை நான் இப்போது உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். ஒன்றை மட்டும் என்னால் இப்போதே உறுதியாகச் சொல்ல முடியும். இதுவரை தமிழ் சினிமாவிலேயே யாரும் தொடாத ஒரு கதைக்களத்தை அஜித்திற்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்!’’ என்று கூறியிருக்கிறார். இதனால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;