தல பட டைட்டில் ரெடி! ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

தல பட டைட்டில் ரெடி! ஃபர்ஸ்ட் லுக் எப்போது?

செய்திகள் 18-Aug-2014 11:21 AM IST Top 10 கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் அஜித் - கௌதம் மேனன் கூட்டணி அமைத்துள்ள படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக டைட்டில் வைக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகளையும் விரைவில் துவங்கவிருக்கிறார்களாம். இப்படம் சம்பந்தப்பட்ட லேட்டஸ்ட் தகவலின் படி இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை விநாயக சதுர்த்தி விழாவன்று (29-8-14) வெளியிடவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ‘ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன் அனுஷ்கா, த்ரிஷா, அருண்குமார், விவேக் முதலானோர் நடிக்க, இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். கௌதம் மேனன், அஜித் முதன் முதலாக இணைந்துள்ள படம் இது என்பதோடு, அஜித் டபுள் ரோலில் நடிக்கும் படம் என்பதாலும் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;