வைபவுக்கு ஜோடியாகும் லாவண்யா திரிபாதி!

வைபவுக்கு ஜோடியாகும் லாவண்யா திரிபாதி!

செய்திகள் 18-Aug-2014 10:43 AM IST VRC கருத்துக்கள்

சசிகுமார் ஜோடியாக 'பிரம்மன்' படத்தில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. இந்தப் படத்தைத் தொடர்ந்து வைபவ் ரெட்டி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருடன் ஜோடி சேரவிருக்கிறார் லாவண்யா திரிபாதி! இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராக இருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தமிழ் பதிப்பினை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ராஜு கண்பதி இயக்குகிறார். தெலுங்கு வெர்ஷணை இயக்குனர் ராஜமௌலியின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - ட்ரைலர்


;