இயக்குனருக்கு தெரியாமல் வெளியான ‘அரண்மனை’ டீஸர்!

இயக்குனருக்கு தெரியாமல் வெளியான ‘அரண்மனை’ டீஸர்!

செய்திகள் 18-Aug-2014 10:28 AM IST Chandru கருத்துக்கள்

வினய், ஹன்சிகா, ராய் லக்ஷ்மி, ஆன்ட்ரியா, சந்தானம், சூரி, கோவை சரளா, மனோபாலா ஆகியோருடன் சுந்தர்.சியும் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திகில் படம் ‘அரண்மனை’. விஷன் ஐ மீடியாஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்கி வருபவர் சுந்தர்.சி. முதல்முறையாக ‘ஹாரர்’ படத்தை சுந்தர்.சி இயக்கி வருவதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் இரண்டு நாட்களுக்கு முன்பு எந்தவித முன்அறிவிப்புமின்றி திடீரென யூ&டியூப்பில் வெளியானது. ஆனால், அந்த டீஸரை இயக்குனர் சுந்தர்.சியின் கவனத்திற்கு கொண்டு வராமலேயே தயாரிப்பு நிறுவனத்திலிருந்து யாரோ வெளியிட்டுள்ளார்கள் என சுந்தர்.சியின் மனைவி குஷ்பு ‘ட்வீட்’டில் தெரிவித்துள்ளார். அதோடு ‘‘முறையான கிராஃபிக்ஸ் வேலைகளோ, ஆர்.ஆர். பணிகளோ செய்யப்படாமலேயே அந்த டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. எல்லா வேலைகளையும் சிறப்பாக முடிக்கப்பட்ட டீஸர் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியிடப்படும். அதுவரை தயவுசெய்து காத்திருங்கள்’’ எனவும் குஷ்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘ஆக்கப் பொறுத்தவங்க.... கொஞ்சம் ஆறவும் பொறுக்கக்கூடாதா?’ பாஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;