படமாகிய தினசரி தலைப்புச் செய்தி!

படமாகிய தினசரி தலைப்புச் செய்தி!

செய்திகள் 18-Aug-2014 10:24 AM IST inian கருத்துக்கள்

‘அன்னை புதுமை மாதா ஃபிலிம்ஸ்’ ஆர்.எல்.யேசுதாஸ் வழங்க, சரவணா ஃபிலிம் மேக்கர்ஸ் சுதாகர் தயாரிக்கும் படம், ‘காதல் 2014’. இந்த படத்தில் ஹரீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். மற்றும் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்த மணிகண்டன் சில வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுகந்தன்.

படம் பற்றி இயக்குனர் சுகந்தனிடம் கேட்டபோது, ‘‘இன்று இந்தியா முழுக்க தினசரி பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வருவது பாலியல் பலாத்கார சம்பவங்கள்தான். அதையே இதில் கதை கருவாக வைத்திருக்கிறோம். இளம் காதலர்களான ஹரீஷ், நேகா இருவரும் அடர்ந்த கட்டுப் பகுதிக்குள் செல்வதை பார்த்த ஒரு கும்பல் பின் தொடர்கிறது. ஹரீஷை கட்டிப் போட்டு விட்டு நேகாவை கற்பழித்து விடுகிறார்கள். அதற்கு பிறகு அவள் அந்த வேதனையை நினைத்து வீட்டிற்குள்ளேயே முடங்கி விட்டாளா ? இல்லை அதை மறந்து வாழ்க்கை போரட்டங்களை எதிர்நோக்கி பயணமானாளா? என்பதை திரைக்கதையாக்கியிருக்கிறோம். இன்று நாட்டுக்கு தேவையான கருத்தைத் தான் பதிவு செய்திருக்கிறோம். படத்தை பார்த்து பெரிதும் பாராட்டிய ஆர்.எல்.யேசுதாஸ், இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;