நடிகை ராதாவின் சகோதரி மகள் நாயகியானார்!

நடிகை ராதாவின் சகோதரி மகள் நாயகியானார்!

செய்திகள் 18-Aug-2014 10:19 AM IST inian கருத்துக்கள்

மாதாஸ் பிளஸ்ஸிங் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘வலியுடன் ஒரு காதல்’. இந்த படத்தில் புதுமுகம் ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கௌரி நம்பியார் நடிக்கிறார்.இவர் நடிகை ராதாவின் சகோதரி மகள். கார்த்திகா, துளசி ஆகியோரின் சகோதரி இவர். இந்தப் படத்தை இயக்கும் சஞ்ஜீவன் படம் குறித்து கூறும்போது,

‘‘கிராமத்தில் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் ராஜேஷ். பக்கத்து ஊரில் உள்ள பணக்கார நாயகியை காதலிக்கிறான்.இந்த காதலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. முடிவில் காதல் ஜெயித்ததா இல்லையா? என்பதைத் தான் திரைக்கதையாக்கி இருக்கிறோம். கிளைமாக்ஸ் காட்சி யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு திகைப்பூட்டும் விதமாக உருவாக்கப் பட்டுள்ளது.படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நாகர்கோவில் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வருகிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;