சூரியன் எஃப்.எம்மில் ஏ.ஆர்.ரஹ்மான்!

சூரியன் எஃப்.எம்மில் ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 16-Aug-2014 11:59 AM IST VRC கருத்துக்கள்

வசந்த பாலன் இயக்கியுள்ள ‘காவியத்தலைவன்’ படப் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நாளை மறுநாள் (18-8-14) சூரியன் எஃப்..எம்மில் நடைபெறவிருக்கிறது. அன்று காலை 9 மணி முதல் 11 மணிவரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் ‘காவியத்தலைவன்’ படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டு, தான் இசை அமைத்திருக்கும் பாடல்களை நேரடியாக ஒலிபரப்பு செய்யவிருக்கிறார். சூரியன் எஃப்.எம்மில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்ளும் முதல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இது தானாம்! இதனை ஏ.ஆர்.ரஹ்மானே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘காவியத்தலைவன்’ படத்தின் பாடல்களின் உரிமையை சோனி நிறுவனம் பெற்றிருக்க, இப்படத்தில் சித்தார்த், வேதிகா, பிருத்திவிராஜ் முதலானோர் நடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;