வாலியின் பாடலுக்கு யுவனிடம் கேட்டு வாங்கிய ட்யூன்!

வாலியின் பாடலுக்கு யுவனிடம் கேட்டு வாங்கிய ட்யூன்!

செய்திகள் 16-Aug-2014 11:21 AM IST VRC கருத்துக்கள்

‘ஆரண்யகாண்டம்’ எனும் வித்தியாசமான படத்தை தயாரித்த எஸ்.பி.பி.சரணின் அடுத்த தயாரிப்பு ‘திருடன் போலீஸ்'. தினேஷ், ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சரண் தயாரித்த ‘ஆரண்ய காண்டம்’ படத்திற்காக மறைந்த கவிஞர் வாலி ஒரு பாடலை இயற்றியிருந்தார். ஒரு சில காரணங்களால் ‘ஆரண்யகாண்டம்’ படத்தில் அப்பாடல் இடம்பெறவில்லை. இப்போது அந்தப் பாடலை ‘திருடன் போலீஸ்’ படத்தில் பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறும்போது,

‘‘எனக்கு மறைந்த கவிஞர் வாலி ஐயாவுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், என்னுடைய தயாரிப்பாளர்கள் சரண் மற்றும் செல்வா எனக்கு அவருடைய ஒரு பாடலை படமாக்க வாய்ப்பு தந்தது மறக்க முடியாதது. ‘‘மூடு பனிக்குள் ஓடி திரியும் மேகம் போல மயக்க நிலை…' என்ற வாலி ஐயாவின் பாடல் வரிகள் கேட்பவர்களை மெய் மறக்க செய்து மயக்க வைக்கிறது. சரண் தயாரித்த ‘ ஆரண்ய காண்டம்' படத்துக்காக இயற்றப்பட்ட பாடல் இது! ஆனால் படமாக்கப்பட வில்லை. இந்த பாடலை எனக்கு கொடுக்கும் படி சரண் சாரிடம் கேட்ட போது, அதற்கேற்ப நல்ல ட்யூன் நீ யுவனிடம் வாங்கினால் தருகிறேன் என்றார் . நான் இதை யுவனிடம் சொல்ல அவரும் தயக்கம் இன்றி சட்டென்று ஒப்புக் கொண்டு அருமையான படலை இசை வடிவமாக வழங்கினார். இப்போது அந்த பாடல் உட்பட படத்தில் உள்ள அனைத்து பாடல்களுக்கும் கிடைதுள்ள பெரும் வரவேற்பு மகிழ்ச்சியை தருகிறது. படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படம் அடுத்த (செப்டம்பர்) மாதம் நிச்சயமாக வெளி வரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;