இயக்குனர் கே.பாலச்சந்தர் மகன் மரணம்!

இயக்குனர் கே.பாலச்சந்தர் மகன் மரணம்!

செய்திகள் 16-Aug-2014 10:39 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மூத்த மகன் கைலாசம். இவர், ‘மின் பிம்பங்கள்’ என்ற நிறுவனம் மூலம் ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார். இவர் சமீபத்தில் காசநோய் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் 27-ஆம் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீர் என்று அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவு சினிமா மற்றும் டிவி துறையிலுள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று சென்னையில் நடக்கிறது. பல திரைப்படங்களை தயாரித்துள்ள புஷ்பா கந்தசாமி இவரது சகோதரி ஆவார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;