செப்டம்பரில் சுசீந்திரனின் ஜீவா!

செப்டம்பரில் சுசீந்திரனின் ஜீவா!

செய்திகள் 16-Aug-2014 10:31 AM IST VRC கருத்துக்கள்

'பாண்டிய நாடு' படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கி வரும் படம் ‘ஜீவா’. ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் சுசீந்திரனுடன் இணைந்த விஷ்ணு விஷால், சூரி மீண்டும் இணைந்துள்ள இப்படத்தை ‘பிக் ஃபிலிம்ஸ்’ மற்றும் ஆர்யாவின் ‘ஷோ பீப்பிள்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இதில் விஷுணு விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தேசிய அளவிலான ஒரு கருத்துடைய கதையாக இப்படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு மதி ஒளிப்பதிவு செய்ய, ‘ராஜா ராணி’ புகழ் எடிட்டர் ரூபன் எடிட்டிங் செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தை அடுத்த மாத ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;