கவிஞர் வைரமுத்துவுக்கு சர்வதேச விருது!

கவிஞர் வைரமுத்துவுக்கு சர்வதேச விருது!

செய்திகள் 16-Aug-2014 10:20 AM IST VRC கருத்துக்கள்

கவிஞர் வைரமுத்து எழுதி 2012-ல் வெளிவந்த நாவல் ‘மூன்றாம் உலகப்போர்’. இந்த நாவலுக்கு மலேசியாவின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரிய விருது கிடைத்துள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ஆம் தேதி கோலாலம்பூரில் நடக்கும் விழாவில் இவ்விருதினை பெற்றுக்கொள்ள இருக்கிறார் வைரமுத்து. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வரும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம் சிறந்த தமிழ் நாவலுக்கான போட்டியை சமீபத்தில் அறிவித்தது. இதில் இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகளின் 198 நாவல்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்தப் போட்டியில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மூன்றாம் உலகப்போர்’ சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அந்த அறவாரியத்தின் செயலாளர் டத்தோ சகாதேவன் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;