அடுத்த படம் குறித்து ‘குக்கூ’ ராஜுமுருகன் விளக்கம்!

அடுத்த படம் குறித்து ‘குக்கூ’ ராஜுமுருகன் விளக்கம்!

செய்திகள் 14-Aug-2014 5:13 PM IST VRC கருத்துக்கள்

‘குக்கூ’ படத்தை இயக்கிய ராஜு முருகன், அடுத்து தனுஷை வைத்து படம் இயக்க இருக்கிறார், விஜய் சேதுபதிக்காக ஒரு கதையை சொல்லி இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால் ராஜு முருகன் இந்த செய்திகளை எல்லாம் மறுத்துள்ளார். இது சம்பந்தமாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘ஊடக நண்பர்களின் ஆதரவு என்னுடைய முதல் படம் பெரும் வெற்றி அடைய முக்கிய காரணமாக அமைந்தது. 'குக்கூ'வின் வெற்றி எனக்கு கொடுத்த மகிழ்ச்சியை விட அடுத்த படத்தை பெரிதாக தர வேண்டும் என்ற உந்துதல் தந்ததே அதிகம். தற்போது எனது அடுத்த படத்துக்கான கதையை எழுதிக் கொண்டு இருக்கிறேன். அந்த படத்தின் கதா பாத்திரங்களை அந்த கதைதான் தீர்மானிக்கும். ஊடகங்கள் இடையே எனது அடுத்த படத்தைப் பற்றி கற்பனை யூகங்களும், கேள்விகளும் பெரிதளவில் இருப்பதை நான் அறிகிறேன். அந்த தகவல்கள் எதுவும் இந்த தருணத்தில் உண்மையில்லை. நான் அடுத்ததாக முற்றிலும் தொடப்படாத ஒரு புதிய கதை களத்தில் பயணமாக உள்ளேன். இதை பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வரும்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜோக்கர் - என்னங்க சார் பாடல் வீடியோ


;