விஜய் மனம் திறந்து பாராட்டிய படம்!

விஜய் மனம் திறந்து பாராட்டிய படம்!

செய்திகள் 14-Aug-2014 3:22 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜிகர்தண்டா’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சித்தார்த், லட்சுமி மேனன், சிம்ஹா முதலானோர் நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டை பெற்றுள்ளது. அத்துடன் தமிழ் திரையுலக பிரபலங்களான மணிரத்னம், ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீரம் உட்பட பலர் ‘ஜிகர்தண்டா’வை பார்த்து படத்தையும், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜையும் பாராட்டியுள்ள நிலையில் நடிகர் விஜய்யும் ‘ஜிகர்தண்டா’ படத்தை பார்த்து கார்த்திக் சுப்பராஜை மனம் திறந்து பாராட்டியுள்ளார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தொடர்பு கொண்டு விஜய் பாராட்டும்போது, ‘‘ஜிகர்தண்டா’வை ரொம்பவும் ஜாலியா, விறுவிறுப்பாக பண்ணியிருந்தீங்க. இதே மாதிரியான வித்தியாசமான படங்களை தொடர்ந்து பண்ணுங்கள்’’ என்று கூறியுள்ளார். இந்த தகவலை கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;