மீண்டும் வருகிறார் ‘ஓ போடு’ ராணி!

மீண்டும் வருகிறார் ‘ஓ போடு’ ராணி!

செய்திகள் 14-Aug-2014 11:32 AM IST VRC கருத்துக்கள்

ராமராஜன் நடித்த ‘வில்லுப் பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ராணி. இந்தப் படத்தை தொடர்ந்து அவரால் ஹீரோயினாக சினிமாவில் பிரகாசிக்க முடியவில்லை என்றாலும் ஏராளமான படங்களில் குத்துப்பாடு, கவர்ச்சி, வில்லி வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். அஜித் நடித்த ‘காதல் கோட்டை’ படத்தில் இடம் பெற்ற ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா…’ மற்றும் விக்ரமின் ‘ஜெமினி’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ போடு… ஓ போடு’ ஆகிய பாடல்கள் போதும் ராணியை என்றைக்கும் நினைவில் வைத்துக்கொள்ள! தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்துள்ள ராணி சில காலம் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். ஆடிய காலும், மேக்-அப் போட்ட முகமும் சும்மா இருக்காது என்று சொல்வது மாதிரி ராணி மீண்டும் நடிக்க வந்து இப்போது ‘ராணி ருத்ரம்மா தேவி’, ‘பிரேம்ல பட்டாண்டி’, ‘ஒக லைலா கோசம்’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் நடித்து வருவதோடு தமிழ் படங்களில் நடிக்கவும் ராணி ஆர்வாக இருக்கிறாராம்! ஆனால் முன்பு நடித்தது மாதிரி கவர்ச்சியாக ஒற்றைப் பாடலுக்கு எல்லாம் நடனம் ஆட விருப்பமில்லை என்று கூறும் ராணிக்கு அண்ணி, அக்கா, அம்மா, வில்லி கேரக்டர்கள் என்றால் ‘டபுள் ஓகே’ என்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜெமினி கணேசனும்சுருளி ராஜனும் - டிரைலர்


;