அஜித்துக்காக ‘பிஜிஎம்’மில் புதுமை செய்யும் ஹாரிஸ்!

அஜித்துக்காக ‘பிஜிஎம்’மில் புதுமை செய்யும் ஹாரிஸ்!

செய்திகள் 14-Aug-2014 10:55 AM IST Chandru கருத்துக்கள்

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித்தை பழைய கறுப்புத் தலைமுடியுடன் காட்டவிருக்கிறார் கௌதம் மேனன். அதேபோல் கௌதம் - ஹாரிஸின் சூப்பர் கூட்டணியும் இப்படத்தில் இணைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு. மேலும், இரட்டை வேட அஜித், அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா என படத்தின் நட்சத்திரப் பட்டாளமும் மிகப்பெரியதுதான். இப்படத்தில் அஜித் என்ன வேடத்தில் நடிக்கிறார்? எப்படிப்பட்ட தோற்றத்தில் வருவார்? என இப்போது நகம் கடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அவரின் ரசிகர்கள். வழக்கமாக கௌதம் படம் என்றாலே டெக்னிக்கலாக உச்சத்தில் இருக்கும். அந்த வகையில் இப்படத்தின் பின்னணி இசைக்காக ‘டால்பி அட்மாஸ்’ ஸ்டுடியோவில் ‘பிஜிஎம்’ வேலைகளைத் துவங்கியிருப்பதாக ஹாரிஸ் ஜெயராஜ் குறிப்பிட்டிருக்கிறார். இந்த டால்பி அட்மாஸ் ஸ்டுடியோவை ஹாரிஸ் ஜெயராஜ் முதல்முறையாக இப்போதுதான் அஜித் படத்திற்கு பயன்படுத்துகிறாராம். இதனால் பின்னணி இசையில் இப்படம் பின்னிப் பெடலெடுக்கும் என இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் ‘தல’ ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;