‘சித்தவைத்திய சிகாமணி’க்கு ‘யு’

‘சித்தவைத்திய சிகாமணி’க்கு  ‘யு’

செய்திகள் 14-Aug-2014 10:23 AM IST VRC கருத்துக்கள்

பரத்தின் 25-ஆவது படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. எல்.ஜி.ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் பரத்துடன் நந்திதா ஜோடியாக நடித்திருக்க, இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, படவா கோபி, ஜூனியர் பாலையா உட்பட 22 காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். வருகிற 22-ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படம் நேற்று தணிக்கையானது. இந்தப் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘க்ளீன் என்டர்டெயின்மென்ட் மூவி’ என்று படத்திற்கு பாராட்டு தெரிவித்திருப்பதோடு படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகெட் வழங்கியுள்ளனர். சைமன் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ‘ராஜம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் புஷ்பா கந்தசாமி, எஸ்.மோகன் இணைந்து தயாரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;