தமிழ் ‘திருசியம்’ - யார் யார் நடிக்கிறார்கள்?

தமிழ் ‘திருசியம்’ - யார் யார் நடிக்கிறார்கள்?

செய்திகள் 13-Aug-2014 5:08 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘திருசியம்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் கமல் நடிக்கிறார் என்பதும், படத்திற்கு ‘பாபநாசம்’ என்று டைட்டில் வைத்திருப்பதும் தெரிந்த விஷயம் தான். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது முடிவாகாமல் இருந்தது. முதலில் மலையாளம் மற்றும் தெலுங்கு ‘திருசியம்’ படங்களில் நடித்த மீனாவே தமிழிலும் நடிக்கிறார் என்று பேசப்பட்ட்து. அதற்குப் பிறகு ஸ்ரீதேவி, கௌதமி முதலானோரது பெயர்கள் அடிப்பட்டது. இப்போது அந்த கேரக்டரில் கௌதமி நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. இந்த தகவலை இந்தப் படத்தை இயக்கும் ஜித்து ஜோசஃபே தெரிவித்துள்ளார். அதுமாதிரி இந்தப் படத்தில் முக்கிய கேரக்டராக வரும் பெண் போலீஸ் அதிகாரி கேரக்டரில் மலையாளத்தில் நடித்த ஆஷா சரத்தே நடிக்க, படத்தில் இன்னொரு முக்கிய போலீஸ் கேரக்டரும் உண்டு! கிட்டத்தட்ட வில்லனை போன்ற இந்த போலீஸ் கேரக்டரில் கலாபவன் மணி நடிக்கிறார். படத்தின் கதைப்படி கமலுக்கு இரண்டு மகள்கள்! அவர்களில் மூத்த மகளாக ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நடிக்க, இளைய மகளாக மலையாளத்தில் நடித்த எஸ்தர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் திருநெல்வேலியில் ஆரம்பமாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;