‘அந்நியன்’ விக்ரம் பாதிப்பில் ‘சரபம்’ சலோனி!

‘அந்நியன்’ விக்ரம் பாதிப்பில்  ‘சரபம்’ சலோனி!

செய்திகள் 13-Aug-2014 3:09 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசான ‘சரபம்’ படத்தில் கதையின் நாயகியாக நடித்தவர் சலோனி லுத்ரா. வட இந்திய அழகியான சலோனி, ‘தான் ‘சரபம்’ படத்தில் சிறப்பாக நடித்தமைக்கு நடிகர் விகரம் தான் காரணம்’ என்று கூறியுள்ளார். விக்ரமுக்கும், சலோனிக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? இதோ அவர் கூறியதை படியுங்கள்.

‘‘சரபம்' படத்தில் நான் இந்த அளவுக்கு நடித்திருப்பதற்கும், அந்த கதாபாத்திரத்தின் வெற்றிக்கும் விக்ரம் சார் தான் காரணம் என்பேன். நான் பார்த்தது குறைந்த அளவிலான தமிழ் படங்கள் என்றாலும் அதில் என்னை மிகவும் கவர்ந்தது விக்ரம் சார் நடித்த ‘அந்நியன்' தான். அதில் நொடியில் முகம் மாறும் விக்ரம் சாரின் அந்த நடிப்புதான் எனக்கு உந்துதல் எனலாம். ‘சரபம்’ படத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது புகை பிடிக்கும் காட்சிகள் தான். எனக்கு அந்த பழக்கம் இல்லை என்பதால் நான் பல்வேறு படங்களில் கதாநாயகிகள் புகை பிடிப்பதை பார்த்து எனெக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு நடித்தேன். சென்னையின் சூழ்நிலையும் , தமிழ் சினிமாவும் பிடித்து விட்டதால் இங்கேயே குடி இருக்கலாம் என முடிவும் செய்துள்ளேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்’’ என்கிறார் சலோனி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;