மீண்டும் புலனாய்வு அதிகாரியாகிறார் மோகன்லால்!

மீண்டும் புலனாய்வு அதிகாரியாகிறார் மோகன்லால்!

செய்திகள் 13-Aug-2014 2:50 PM IST VRC கருத்துக்கள்

ஏற்கெனவே ‘கம்பெனி’, ‘ஆங்’, ‘தேஜ்’ என 3 ஹிந்திப் படங்களில் நடித்திருக்கும் மோகன்லால் மீண்டும் ஒரு ஹிந்திப் படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்திற்கு ‘எஸ்கேப் டு நோவேர்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்திய புலனாய்வு துறை சம்பந்தமான சில தகவல்களை உள்ளடக்கி அமர் பூஷன் எழுதிய ‘எஸ்கேப் டு நோவேர்’ என்ற நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்படும் இப்படத்தை சஞ்சய் திரிபாதி இயக்குகிறார். ஏற்கெனவே ராம்கோபால் வர்மா இயக்கிய ‘கம்பெனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த மோகன்லால், இப்படத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த புலனாய்வு அதிகாரியாக நடிக்க இருக்கிறார். க்ரைம், த்ரில்லர், புலனாய்வு கதையாக உருவாக இருக்கும் இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;