அனுஷ்காவின் பிரதான மந்திரியாக பிரகாஷ் ராஜ்!

அனுஷ்காவின் பிரதான மந்திரியாக பிரகாஷ் ராஜ்!

செய்திகள் 13-Aug-2014 11:29 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் படம் ‘ருத்ரம்மா தேவி’. ‘3டி’ தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தை குணசேகர், தனது ட்ரீம் புராஜெக்டாக இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ருத்ரம்மா தேவியாக அனுஷ்கா நடிக்க, அல்லு அர்ஜுன், ராணா முதலானோருடன் பிரகாஷ் ராஜும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்ட நிலையில், பிரகாஷ் ராஜ் கேர்கடர் சம்பந்தப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கும் நேற்று வெளியானது. பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் ஏற்று நடித்திருக்கும் கேர்டகர் பெயர் ஷிவ தேவய்யா. இவர், ருத்ரம்மா தேவியின் அரசவையில் பிரதான மந்திரியாம்! பிரகாஷ் ராஜ் தான் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் குறித்து குறிப்பிடும்போது, ‘‘இயக்குனர் குணசேகர் வித்தியாசமான ஒரு கேரக்டரை எனக்கு தந்துள்ளார். ரொம்பவும் என்ஜாய் பண்ணி நடித்த கேரக்டர் ஷிவ தேவய்யா. இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செய் - டீசர்


;