‘எலி’ பிடிக்கும் வடிவேலு!

‘எலி’ பிடிக்கும் வடிவேலு!

செய்திகள் 13-Aug-2014 10:51 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு யுவராஜ் தயாளன் இயக்கத்தில் ‘தெனாலி ராமன்’ படத்தில் டபுள் ரோலில் நடித்த வடிவேலு, மீண்டும் யுவராஜ் தயாளன் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘எலி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். ‘தெனாலி ராமனை’ பீரியட் படமாக இயக்கிய யுவராஜ், ‘எலி’ படத்தையும் 1970-களில் நடக்கும் கதை மாதிரி பீரியட் ஃபிலிமாக இயக்க உள்ளார். ‘தெனாலி ராமன்’ படத்தைப் போன்றே காமெடிக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்திசண்டை - டிரைலர்


;