விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

செய்திகள் 13-Aug-2014 10:32 AM IST VRC கருத்துக்கள்

‘சைவம்’ படத்தை தொடர்ந்து விஜய் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவர், பிரபல நடிகை மேனகா, மலையாள பட தயாரிப்பாளர் சுரேஷ் தம்பதியரின் மகள் ஆவார். ஒரு சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் பிரியதர்சன் இயக்கிய ’கீதாஞ்சலி’. இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி, அடுத்து நடித்த படம் ‘ரிங்மாஸ்டர்’. இதில் திலீப் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படங்களை தொடர்ந்த் விஜய் இயக்கும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக விருக்கிறார். கீர்த்தியின் அம்மா மேனகா ‘நெற்றிக்கண்’ உட்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;