கிருஷ்ணா படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட்!

கிருஷ்ணா படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட்!

செய்திகள் 13-Aug-2014 9:50 AM IST Chandru கருத்துக்கள்

டாக்டர் எல்.சிவபாலனின் ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்க மகாலட்சுமி மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘வானவராயன் வல்லவராயன்’. கிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்தும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜார் நடித்திருக்கும் இப்படத்தில் சௌகார்ஜானகி, கோவைசரளா, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். மேலும் சிறப்புத் தோற்றம் ஒன்றில் சந்தானமும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் சென்சார் மும்பையில் நடைபெற்றது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட இல்லாமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருப்பவர் ராஜமோகன். ஒளிப்பதிவை பழனிகுமார் கவனிக்க, இசையமைத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;