அக்ஷராவுடன் தனுஷ் ஆடிய சூப்பர் டான்ஸ்!

அக்ஷராவுடன் தனுஷ் ஆடிய சூப்பர் டான்ஸ்!

செய்திகள் 12-Aug-2014 5:52 PM IST Chandru கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 25வது நாளை சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார் தனுஷ். வெற்றியின் சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும், அடுத்தடுத்த படப்பிடிப்பு வேலைகளிலும் மனிதர் பிஸிதான். பால்கியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இரண்டாவது ஹிந்திப் படமான ‘ஷமிதாப்’பின் ஷூட்டிங் தற்போது பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. அமிதாப்புடன் இணைந்து தனுஷ் நடிப்பதால் இப்படத்திற்கு பாலிவுட் மட்டுமின்றி நம்மூரிலும் தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் படம் குறித்து ‘ட்வீட்’ செய்துள்ளார். அதில்...

‘‘ராபின் வில்லியம்ஸ் மரணச்செய்தியால் கனத்த இதயத்துடன் ‘ஷமிதாப்’பின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அக்ஷரா ஹாசனுடன் இணைந்து தனுஷ் இப்படத்திற்காக சூப்பர் டான்ஸ் ஒன்றை ஆடினார். தனுஷின் இந்த ஆட்டத்தைப் பார்த்ததும் மும்பை முழுவதும் ஹை வோல்ட் எனர்ஜி பரவியதைப் போல் உணர்கிறேன். தனுஷ் ராக்ஸ்! இப்படத்தில் அக்ஷராவின் நடிப்பைப் பார்த்ததும் ‘இந்திய சினிமாவிற்கு சிறந்த நடிகை ஒருவர் கிடைத்துவிட்டதாக’ எனக்குத் தோன்றியது’’ என்று குறிப்பட்டிருக்கிறார்.

ஹிந்தியின் ‘மன்மத ராசா’வைப் பார்க்க பாலிவுட் வாலாக்கள் இப்போதே வெயிட்டிங்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;