விஜய்சேதுபதிக்கு கதை சொன்ன ‘குக்கூ’ இயக்குனர்!

விஜய்சேதுபதிக்கு கதை சொன்ன ‘குக்கூ’ இயக்குனர்!

செய்திகள் 12-Aug-2014 4:26 PM IST Chandru கருத்துக்கள்

தினேஷ், மாளவிகா கண் பார்வையற்றவர்களாக நடித்து வெளிவந்த ‘குக்கூ’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனந்த விகடனில் வெளிவந்த ‘வட்டியும் முதலும்’ தொடரின் எழுத்தாளர் ராஜு முருகன் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கப்போகிறார் என செய்திகள் வெளிவந்தன. ஆனால், தற்போது இவர் விஜய் சேதுபதிக்கு ஒரு கதை சொல்லியிருக்கிறாராம்.

சமீபத்தில் ‘புறம்போக்கு’ படப்பிடிப்பிற்கு சென்ற இயக்குனர் ராஜு முருகன், படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொல்லியுள்ளாராம். இந்தக் கதை விஜய் சேதுபதிக்கு மிகவும் பிடித்திருந்தாலும், ‘வன்மம்’, ‘மெல்லிசை’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘வசந்தகுமாரன்’ என பல படங்களில் பிஸியாக அவர் நடித்து வருவதால் கொஞ்சம் யோசித்து முடிவு சொல்வதாக ராஜு முருகனிடம் தெரிவித்திருக்கிறாராம். வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர்போன விஜய் சேதுபதி நிச்சயம் ராஜு முருகன் இயக்கத்தில் நடிப்பார் எனவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;