‘வீரம்’ சிவாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

‘வீரம்’ சிவாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

செய்திகள் 12-Aug-2014 12:14 PM IST Chandru கருத்துக்கள்

கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக களமிறங்கியவர் சிவா. இப்படம் பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில் அடுத்து யார் நடிக்கப்போகிறார் என்ற பெரிய கேள்வி அப்போது நிலவியது. பின்னர், தங்கள் ‘தல’யை வைத்துதான் படம் சிவா எடுக்கப்போகிறார் என்று தெரிந்ததும் அஜித் ரசிகர்கள் துள்ளிக்குதித்தனர். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சிவா இயக்கிய ‘வீரம்’ படமும் சூப்பர்ஹிட்டாக அமைய ‘சிறுத்தை’ சிவா தற்போது ‘வீரம்’ சிவாவாக மாறிவிட்டார்.

இந்நிலையில், கௌதம் மேனன் படத்தை அடுத்து அஜித் நடிக்கவிருக்கும் 56வது படத்தை இயக்கும் வாய்ப்பும் சிவாவிற்கே கிடைத்திருக்கிறது. இந்த செய்தி ‘தல’ ரசிகர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்று (ஆகஸ்ட் 12) பிறந்தநாள் காணும் இயக்குனர் சிவாவை வாழ்த்துக்களால் திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். சிவாவும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘நன்றி தல ரசிகர்களே...’’ என குறிப்பிட்டிருக்கிறார். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகிலிருந்தும் சிவாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;