ஆச்சரியப்படுத்தும் ‘அஞ்சான்’!

ஆச்சரியப்படுத்தும் ‘அஞ்சான்’!

செய்திகள் 12-Aug-2014 11:06 AM IST Chandru கருத்துக்கள்

இன்னும் 3 நாட்களில் கண்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது சூர்யாவின் ‘அஞ்சான்’. படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘அஞ்சான்’ படத்தின் டிக்கெட்டுகள் வேகவேகமாக ‘புக்’ செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பல தியேட்டர்களில் காலை 6 மணியிலிருந்து சிறப்புக் காட்சிகளையும் ஒளிபரப்ப இருக்கிறார்கள். அதற்கான முன்பதிவுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை வெளிவந்த எந்த சூர்யா படத்தையும்விட ‘அஞ்சான்’ படம் மிக அதிகமாக 1500 தியேட்டர்கள் வரை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. குறிப்பாக, தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக முழுக்க முழுக்க டிஜிட்டல் வெளியீடாக ‘அஞ்சான்’ படம் வெளியாகவிருப்பதை ‘யுடிவி’ தனஞ்செயன் உறுதிப்படுத்தியுள்ளார். மிக உயர்ந்த தொழில்நுட்பத்தில் ‘ரெட் டிராகன் கேமரா’வைப் பயன்படுத்தி ‘6கே’ எனும் தரத்தில் அஞ்சானை படமாக்கியிருக்கிறாராம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இதனால் ‘அஞ்சான்’ படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு உணர்வைத் தரும் என்பது உறுதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;