விக்ரமுடன் இணையும் ‘முண்டாசுப்பட்டி’ முனீஷ்காந்த்!

விக்ரமுடன் இணையும் ‘முண்டாசுப்பட்டி’ முனீஷ்காந்த்!

செய்திகள் 12-Aug-2014 10:24 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் வெளிவந்து 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் முனீஷ்காந்த் கேரக்டரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் தற்போது பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். குறிப்பாக விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தில் விக்ரமுடன் படம் முழுவதும் வருவதுபோன்ற கேரக்டர் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம் ராமதாஸ். தற்காலிகமாக ‘பத்து எண்றதுக்குள்ள...’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். சாலைப் பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 2002ஆம் வருடமே இமான் தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக களமிறங்கியிருந்தாலும், விக்ரம் படத்திற்கு இப்போதுதான் முதல்முறையாக இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;