பிரபல ஹாலிவுட் நடிகர் தற்கொலை!

பிரபல ஹாலிவுட் நடிகர் தற்கொலை!

செய்திகள் 12-Aug-2014 9:49 AM IST Chandru கருத்துக்கள்

ஆஸ்கர் விருதை வென்ற காமெடி நடிகர் ராபின் வில்லியம்ஸ் அருடைய வீட்டில் இறந்திருப்தாக ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் வசித்த வந்த 63 வயது ராபின் வில்லியம்ஸ் நேற்று நண்பகல் வேளையில் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். மன உளைச்சலில் போராடிக் கொண்டிருந்ததுதான் அவருடைய தற்கொலைக்குக் காரணம் என அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தலைமுறையின் சிறந்த அமெரிக்க பொழுதுபோக்காளராக விளங்கிய வில்லியம்ஸ் ‘மோர்க் அன்ட் மைன்டி’ டெலிவிஷன் தொடர் மூலம் புகழ்பெற்றவர். அதன்பிறகு சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் 1987ஆம் ஆண்டு வெளிவந்த ‘குட்மார்னிங் வியட்நாம்’, 1989ல் வெளிவந்த ‘டெட் பெயட்ஸ் சொசைட்டி’ உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். தவிர ‘ஜுமாஞ்சி’, ‘நைட் அட் த மியூசியம்’ போன்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படஙகளிலும் நடித்திருக்கிறார் இவர். அதேபோல் 1997ல் வெளிவந்த ‘குட் வில் ஹன்ட்டிங்’ படத்தில் நடித்ததற்காக ‘சிறந்த துணை நடிக்கரு’க்கான ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார் ராபின் வில்லியம்ஸ்.

ஹாலிவுட்டையும் தாண்டி, உலகம் முழுவதும் பரவலான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ராபின் வில்லியம்ஸின் மறைவு திரையுலகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;