ஷாருக்கான் புதிய முயற்சி!

ஷாருக்கான் புதிய முயற்சி!

செய்திகள் 11-Aug-2014 3:54 PM IST VRC கருத்துக்கள்

பாலிவுட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் ஹிந்திப் படம் ‘ஹேப்பி நியூ இயர்’. சூப்பர் ஹிட்டான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்குப் பிறகு ஷாருக்கன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படத்தை ஃபாரா கான் இயக்கி வருகிறார். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த அதே தீபிகா படுகோனே தான் இப்படத்திலும் கதாநாயகி! தனது ‘ரெட் சில்லீஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்து வரும் ஷாருக்கான், படத்தின் புரொமோஷன் வேலையில் ஒரு புதிய முயற்சியை செய்யவிருக்கிறார். அதாவது, வழக்கமாக ஒவ்வொரு படத்தின் டிரைலரும் யு-ட்யூப் அல்லது ஃபேஸ்புக்கில் தான் ரிலீசாவது வழக்கம்! ஆனால் தனது ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தின் டிரைலரை முதன் முதலாக சோஷியல் நெட்வொர்க்கின் அதி நவீன தொழில்நுட்பமான ‘வாட்ஸ் அப்’பில் வெளியிட இருக்கிறார் ஷாருக்கான்! இந்த டிரைலரை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இப்போது அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறது ‘ஹேப்பி நியூ இயர்’ பட டீம்! ‘வாட்ஸ் அப்’பில் வெளியாகும் முதல் ஹிந்திப் பட டிரைலர் ‘ஹேப்பி நியூ இயர்’ தானாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் - Happy New Year பாடல் மேக்கிங்


;