‘ஜெயம்’ ரவி வீட்டுக்கு வந்த புது வாரிசு!

‘ஜெயம்’ ரவி வீட்டுக்கு வந்த புது வாரிசு!

செய்திகள் 11-Aug-2014 12:11 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு ஏற்கெனவே 2 வயதில் ஆரவ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமுற்றிருந்த ஆர்த்தி - ‘ஜெயம்’ ரவி தம்பதியருக்கு நேற்று இன்னொரு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. ‘ஜெயம்’ ரவி தற்போது சுராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் இருந்து வருகிறார். அதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பை இரண்டு நாட்கள் ஒத்தி வைத்து விட்டு, மனைவி அருகிலேயே இருந்து மனைவியையும், குழந்தையையும் கவனித்து வருகிறார் ‘ஜெயம்’ ரவி. ஏற்கெனவே ‘ஜெயம்’ ரவிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிற நிலையில் இன்னொரு அழகான ஆண் குழந்தைக்கும் அப்பாவாகி இருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;