‘ஃபெஃப்சி’க்கு புதிய தலைவர்!

‘ஃபெஃப்சி’க்கு புதிய தலைவர்!

செய்திகள் 11-Aug-2014 10:56 AM IST VRC கருத்துக்கள்

கடந்த 2 வருடங்களாக இயக்குனர் அமீர் தலைமையில் செயல்பட்டு வந்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெஃப்சி) பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி, அதற்கு புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று சென்னையில் நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஜி.சிவா மற்றும் ‘ஸ்டன்’ சிவா ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் ஜி. சிவா தலைவராக வெற்றி பெற்றுள்ளார். செயலாளராக கே.ஆர்.செல்வராஜ் தேர்வு பெற்றுள்ளார். துணை தலைவர்களாக ஜீவானந்தம், மூர்த்தி, ராமன். சபரிகிரிசன், சம்பத் ஆகிய 5 பேர்களும், துணைச் செயலாளர்களாக தனபால், ராதா, ராஜா, ரமணபாபு, ஸ்டாலின் ஆகிய 5 பேர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பொருளாளராக இருந்து வரும் எஸ்.ஆர்.சந்திரன், அதே பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும், ‘ஃபெஃப்சி’ என்பது 23 சங்கங்களின் கூட்டமைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீவிரம் - டீசர்


;