18-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை!

18-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை!

செய்திகள் 11-Aug-2014 10:26 AM IST VRC கருத்துக்கள்

வசந்தபாலன் இயக்கும் ‘காவியத்தலைவன்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் பாடல்களை கடந்த 31-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் திட்டமிட்ட மாதிரி அன்றைய தினம் ‘காவியத்தலைவன்’ பாடல்கள் வெளியாகவில்லை. தற்போது வருகிற 18-ஆம் தேதி ‘காவியத்தலைவன்’ பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். சித்தார்த், பிருத்திவிராஜ், வேதிகா, நாசர், தம்பி ரமைய்யா முதலானோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படம் நாடகக் கலை பின்னணியில் உருவாகியிருப்பதால் பழங்காலத்து பாணியிலும் இன்றைய காலகட்டத்தின் பின்னணியிலும் இப்படத்தில் நிறைய பாடல்கள் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. அதனால் இப்படத்திற்கு அதிக கவனம் செலுத்தி இசை அமைத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரஹ்மான். ‘அரவான்’ படத்திற்கு பிறகு வசந்த பாலன் இயக்கியுள்ள இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;