துல்கர் சல்மானை இயக்கும் கமலின் வாரிசு!

துல்கர் சல்மானை இயக்கும் கமலின் வாரிசு!

செய்திகள் 9-Aug-2014 3:20 PM IST VRC கருத்துக்கள்

‘வாயை மூடி பேசவும்’, ‘பெங்களூர் டேஸ்’ (மலையாளம்) படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘100 டேஸ் ஆஃப் லவ்’. ‘பெங்களூர் டேஸ்’ படத்தை தொடர்ந்து மலையாளத்தில் எடுக்கப்படவிருக்கும் இப்படமும் முழுக்க முழுக்க பெங்களூர் பின்னணியில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவரும், தமிழில் ‘பிரியாத வரம் வேண்டும்’, ‘ஜே.சி.டேனியல்’ ஆகிய படங்களை இயக்கியவருமான கமலின் மகன் ஜெனுஸ் முகமது இயக்குகிறார். மலையாளத்தில் எராளமான வெற்றிப் படங்களை தந்த கூட்டணி கமல் – மம்முட்டி! இப்போது அவர்களது வாரிசுகள் இணையும் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க, படத்தின் படப்பிடிப்பு விரைவில் பெங்களூருவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;