நடிகர் பாஸ்கி போலீசில் புகார்!

நடிகர் பாஸ்கி போலீசில் புகார்!

செய்திகள் 9-Aug-2014 2:42 PM IST VRC கருத்துக்கள்

நடிகர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலையுலகில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருபவர் பாஸ்கி. கடந்த சில நாட்களாக இவர் பெயரில் ட்விட்டரில் மோசடி பேர்வழி ஒருவன் அக்கவுண்டை துவங்கி, உண்மைக்கும் புறம்பான தகவல்களை போட்டு நடிகர் பாஸ்கியின் பெயரையும், புகழையும் கெடுக்கும் விதமாக செயல்பட்டு வந்திருக்கிறான். இது குறித்து நடிகர் பாஸ்கி சென்னை சைபர் க்ரைம் போலீசில் இன்று புகார் அளித்துள்ளார். பிரபலங்களின் பெயர்களில் ஃபேக் அக்கவுன்டுகளை துவங்கி அவர்களது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிப்பது வாடிக்கையான ஒரு விஷயமாகி விட்டது இப்போது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சவாரி - டிரைலர்


;