விஜய் இயக்கத்தில் அமலா பால்!

விஜய் இயக்கத்தில் அமலா பால்!

செய்திகள் 9-Aug-2014 11:18 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அமலா பாலுக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மாபெரும் வெற்றி, இன்னும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அமலா பால்! ஏற்கெனவே விஜய் இயக்கத்தில் ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ படங்களில் நடித்த அமலா பால், அடுத்து விஜய் இயக்கத்தில் நடிக்க இருப்பது ஒரு பிரபல ஜுவல்லரி விளம்பர படத்தில் தான்! இந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவிருக்கிறது. அமலா பால் திருமணத்திற்கு பிறகு நடித்து வரும் ஒரே திரைப்படம் ‘மிலி’ என்ற மலையாள படம் தான். இந்தப் படம் அவரது திருமணத்திற்கு முன் கமிட் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அம்மா கணக்கு - டிரைலர்


;