ஹேப்பி பர்த்டே மகேஷ் பாபு!

ஹேப்பி பர்த்டே மகேஷ் பாபு!

செய்திகள் 9-Aug-2014 10:30 AM IST VRC கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் மகேஷ் பாபு. முன்னாள் ஆக்‌ஷன் ஹீரோ கிருஷ்ணாவின் புதல்வரான மகேஷ், தனக்கான ஒரு பாணியை வகுத்துக் கொண்டு நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை வழங்கியவர். தெலுங்கு சினிமாவில் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கும் மகேஷ் பாபுவின் பிறந்த நாள் இன்று! தற்போது சீனு வைட்லா இயக்கத்தில் ’ஆகடு’. என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ் பாபு! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஆகடு’வின் இரண்டாவது டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். ஏராளமான ரசிகர்கள், திரையுலகினரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் மகேஷ் பாபுவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

லேட்டஸ்ட் டீசர்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;