ஹன்சிகாவுக்காக காத்திருக்கும் குழந்தைகள்!

ஹன்சிகாவுக்காக காத்திருக்கும் குழந்தைகள்!

செய்திகள் 9-Aug-2014 10:12 AM IST Chandru கருத்துக்கள்

இன்று (ஆகஸ்ட் 9) நடிகை ஹன்சிகாவுக்குப் பிறந்தநாள். கேக் வெட்டி, நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்துவிட்டு ஓய்ந்துபோவதில்லை ஹன்சிகாவின் ஒவ்வொரு வருடப் பிறந்தநாளும். அதையெல்லாம் தாண்டி தனித்தன்மை வாய்ந்தவை அவரின் பிறந்நாள்கள். ஒவ்வொரு வருட பிறந்தநாளின்போது தன்னால் முடிந்த அளவு குழந்தைகளை தத்தெடுத்து பராமரித்து வருகிறார். தற்போது 25க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அன்னையாக மாறியிருக்கிறார் ஹன்சிகா. இந்த வருடப் பிறந்தநாளுக்கும் 5 குழந்தைகளை அவர் தத்தெடுக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. இந்த குழந்தைகளுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் கல்வியையும் கூட ஹன்சிகா தன் சொந்த செலவில் செய்து கொடுத்து வருகிறாராம். இதற்காக ‘ஹன்சிகா குழந்தைகள் அறக்கட்டளை’ என்ற அமைப்பையும் அவர் துவங்கியிருக்கிறாராம். அதோடு ஓவியம் வரைவதிலும் சிறந்தவரான ஹன்சிகா, தான் வரைந்த ஓவியங்களை ஏலத்தில் விட்டு அதன் மூலம் வரும் பணத்தையும் இந்த குழந்தைகள் அறக்கட்டளைக்கு அவர் செலவிடப்போகிறாராம். தனது ஒவ்வொரு பிறந்தநாளையும் இந்த குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடுவதையே வழக்கமாகவும் வைத்திருக்கிறார்.

ஹன்சிகாவின் ஒவ்வொரு வருடப் பிறந்தநாளையும் எதிர்பார்த்து ஏதோ ஒரு மூலையில் அவரின் ஆதரவிற்காக சில குழந்தைகள் ஏங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஹன்சிகாவின் இந்த சேவைக்காகவே அவருக்கு இன்னமும் நிறைய பட வாய்ப்புகள் அமையட்டும். அத்தனையும் ஹிட்களாக மாறட்டும். பணம் குவியட்டும்!

ஹன்சிகாவின் இந்த குழந்தை மனதிற்காகவே அவருக்கு மட்டும் மாதம் ஒரு பிறந்தநாள் வர வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - லவ் என்றவன் பாடல் வீடியோ


;