பரத்துடன் ஒரே காட்சியில் 22 காமெடி நடிகர்கள்!

பரத்துடன் ஒரே காட்சியில் 22 காமெடி நடிகர்கள்!

செய்திகள் 8-Aug-2014 6:21 PM IST VRC கருத்துக்கள்

பரத்தின் 25-ஆவது படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. இப்படம் வருகிற 22-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தில் பரத்துக்கு ஜோடியாக நந்திதா நடித்திருக்க, இவர்களுடன் தம்பி ராமையா, கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, போஸ் வெங்கட், கருணாகரன், சாம்ஸ் உட்பட கிட்டத்தட்ட 22 காமெடி, குணச்சித்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்கியிருக்கும் ரவிச்சந்திரன் படம் குறித்து கூறும்போது, இது ஒரு முழுநீள காமெடி படம் என்றாலும் இதில் சித்த மருத்துவம் குறித்த நல்ல ஒரு மெசேஜும் இருக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சியில் பரத்துடன் 22 காமெடி நடிகர்களும் கலந்துகொள்ளும் காட்சி படம் பார்ப்போரை நீண்ட நேரம் சிரிக்க வைக்கும் வகையில் ஹைலைட் காட்சியாக அமைந்திருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;