டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்த அஞ்சான்!

டிக்கெட் விற்பனையில் சாதனை படைத்த அஞ்சான்!

செய்திகள் 8-Aug-2014 5:51 PM IST VRC கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இந்தப் படத்தை சென்னை ஏரியாவில் வெளியிடும் உரிமையை அபிராமிநாதன் பெற்றுள்ளார். ரஜினி, ஷங்கர் கூட்டணி அமைத்த ‘சிவாஜி’ படத்தின் சென்னை வினியோக உரிமையை பெற்றிருந்த அபிராமி ராமநாதன், அப்போது ‘சிவாஜி’ திரைப்படத்தை 17 தியேட்டர்களில் ரிலீஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இப்போது அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக ‘அஞ்சான்’ படத்தை சென்னையில் மட்டும் 37 தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார் அபிராமி ராமநாதன்! அத்துடன் ’அஞ்சான்’ படத்திற்கான முன் பதிவு துவங்கிய 2 மணி நேரத்திலேயே 5000 டிக்கெட்டுகளுக்கும் மேல் விற்பனையாகி இன்னொரு சாதனையும் படைத்திருக்கிறது ’அஞ்சான்’. இந்த தகவல்களை அபிராமி ராமநாதனே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;