மலையாளத்தில் அறிமுகமாகும் சக்தி!

மலையாளத்தில் அறிமுகமாகும் சக்தி!

செய்திகள் 8-Aug-2014 2:31 PM IST VRC கருத்துக்கள்

‘தொட்டால் பூ மலரும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சக்தி. இந்த படத்தை தொடர்ந்து, ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘ஆட்டநாயகன்’, நினைத்தாலே இனிக்கும்’ உட்பட பல படங்களில் நடித்த சக்தி, இயக்குனர் பி.வாசுவின் மகன் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது ‘படம் பேசும்’ உட்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வரும் சக்தி, மலையாள திரையுலகிலும் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். அனில் கே.நாயர் இயக்கவிருக்கும் ‘ரோசாப்பூ காலம்’ என்று டைட்டில் வைத்திருக்கும் படத்தில் சக்திதான் ஹீரோ! ஹீரோயின் தேர்வு நடந்து வரும் இப்படத்தின் படப்பிப்பு அக்டோபர் மாதம் கேரளாவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எய்தவன் - டிரைலர்


;