மாதவனை வைத்து ஹிந்தியில் களமிறங்கும் சி.வி.குமார்!

மாதவனை வைத்து ஹிந்தியில் களமிறங்கும் சி.வி.குமார்!

செய்திகள் 8-Aug-2014 11:46 AM IST Chandru கருத்துக்கள்

சின்ன பட்ஜெட்டில் அடுத்தடுத்து வெற்றிகளைக் கண்டவர் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவன உரிமையாளர் சி.வி.குமார். சமீபத்தில் இவரின் தயாரிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது ‘சரபம்’ திரைப்படம். இந்நிலையில் இவர் அடுத்ததாக ‘ஒய் நாட் ஸ்டுடியோ’வுடன் இணைந்து ‘இறுதிச் சுற்று’ என்ற படத்தைத் துவங்கியிருக்கிறார். தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்குகிறது. மாதவன் பாக்ஸராக நடிக்கும் இப்படத்தை இயக்குகிறார் சுதா கோங்குரா. இசை சந்தோஷ் நாராயணன்.

கடந்த ஆண்டே இப்படத்திற்கான பேச்சுவார்த்தைகள் துவங்கியிருந்தாலும், இப்போதுதான் படப்பிடிப்பிற்குச் செல்கிறது இப்படம். ஹிந்தியில் இப்படத்திற்கு ‘லால்’ என்று பெயர் வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். இப்படத்திற்காக மாதவன் கடுமையான ‘ஜிம்’ பயிற்சிகளை மேற்கொண்டு உடம்பை ஒரு பாக்ஸருக்கு இருப்பதுபோல் மாற்றியிருக்கிறார். இணையதளத்தில் வெளியான அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘‘ஹிந்தியில் படம் செய்ய வேண்டும் என்பது தன்னுடைய நீண்டநாள் கனவு’’ என குறிப்பிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் சி.வி.குமார். தமிழில் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கும் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் ஹிந்தியிலும் ஜெயிக்கட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டிரைலர்


;