‘அஞ்சான்’ : டிரைலர் விமர்சனம்

‘அஞ்சான்’ : டிரைலர் விமர்சனம்

கட்டுரை 8-Aug-2014 11:12 AM IST Top 10 கருத்துக்கள்

ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளித்திரைகளில் தோன்றவிருக்கிறார் ராஜு பாய். ஏற்கெனவே வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் டீஸருக்கு வரலாற்று வெற்றியைத் தந்தார்கள் சூர்யாவின் ரசிகர்கள். இந்த 2.34 நிமிட முழு நீள டிரைலரில் என்னென்ன விசேஷங்கள்?

‘‘சின்னதா வேட்டுச் சத்தம் கேட்டவுடனே பறந்து போறதுக்கு நான் புறா இல்லடா....’’ என ஃபர்ஸ்ட்லுக் டீஸரின் முடிவில் சூர்யா பேசும் பஞ்ச் வசனம் இந்த முழுநீள டிரைலரின் முதல்காட்சியாக தொடங்குகிறது. சந்துரு என்ற கேரக்டரில் வித்யூத் ஜமால் நடித்திருக்கிறார் என்பதை இந்த டிரைலர் காட்டுகிறது. அதோடு ராஜு, சந்துரு இருவரும் இணை பிரியாத நண்பர்களாகவும் இருக்கிறார்கள். ‘‘குச்சியை ஸ்டைலாக வாயில் வைத்திருப்பவர் ராஜு பாய்... கையில் ஸ்டிக்குடன் வலம் வருபவர் கிருஷ்ணா....’’ என போகிறபோக்கில் ஒரு ரவுடி விளக்கம் கொடுத்துவிட்டு போகிறார். டீஸரைப்போலவே, டிரைலரிலும் சமந்தா வசனம் பேசும் காட்சிகள் எதையும் சேர்க்கவில்லை. ஹீரோயினுக்கு இப்படத்தில் எந்த அளவுக்கு வேலையிருக்கும் என்பது படம் பார்க்கும்போதுதான் தெரியவரும். அதேபோல் சூரியின் காமெடி எதுவும்கூட இடம்பெறவில்லை.

டெக்னிக்கலாக ‘அஞ்சான்’ படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பது இந்த டிரைலரிலேயே தெரிகிறது. குறிப்பாக சந்தோஷ் சிவனின் ‘ரெட் டிராகன்’ கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் பார்ப்பதற்கு ரம்மியாகவும், தெளிவாகவும் இருக்கிறது. சந்தோஷ் சிவன் இப்படத்தின் மிகப்பெரிய தூணாக இருப்பார் என்பதை இப்போதே தாராளமாகச் சொல்லலாம். அதேபோல் சண்டைக் காட்சிகளில் ஸ்டன்ட் சில்வா பின்னி பெடலெடுத்திருப்பார் போல. சூர்யா, வித்யூத் ஜாம்வால் இருவருக்குமே ஆக்ஷன் காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள் எனத் தெரிகிறது. கூடவே யுவனின் பின்னணி இசையும் ‘நச்’சென இருக்கிறது. ‘அஞ்சான்’ படம் பிரம்மாண்டமாக வந்திருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் ‘யுடிவி’, ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனங்களின் தாராளமான பட்ஜெட். லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யாவின் ஆக்ஷனைப் பார்ப்பதற்கு ரசிகர்களும் இப்போதே ஆவலாகி விட்டார்கள். எல்லாவற்றையும்விட சூர்யாவின் அபாரமான உழைப்பும் காட்சிக்கு காட்சி தெரிகிறது.

ஃபர்ஸ்ட் லுக் டீஸரில் வரும் ஒரு சில காட்சிகள் இந்த டிரைலரிலும் வருவதைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக ‘‘ராஜு நய்... ராஜு பாய் போலோ...’’ என்ற வசனத்தை முதல் முறை கேட்டபோது இருந்த ‘மாஸ் ஃபீலிங்’ திரும்பக் கேட்கும்போது கொஞ்சம் மிஸ்ஸிங்.

மொத்தத்தில் சூர்யா ரசிகர்களுக்கு முழு நீள ஆக்ஷன் விருந்து காத்திருக்கிறது ஆகஸ்ட் 15ல். டிரைலரின் முடிவில் சூர்யா பேசும், ‘‘நான் சாகுறதா இருந்தாலும் நான்தான் முடிவு பண்ணணும்... நீ சாகிறதா இருந்தாலும் நான்தான் முடிவு பண்ணணும்’’ எனும் பஞ்ச் டயலாக்கிற்கு தியேட்டர்கள் அதிரப்போவது நிச்சயம். இந்த டிரைலரில் இன்னொரு சஸ்பென்ஸும் ஒளிந்திருக்கிறது. ‘அஞ்சான்’ படத்தில் சூர்யா இரட்டை வேடம் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும், இரண்டு சூர்யாக்கள் இருப்பது போன்ற போட்டோக்களோ அல்லது காட்சியோ இதுவரை ஒருமுறைகூட வெளிவரவில்லை. எனவே படத்தில் இரண்டு சூர்யாக்களா அல்லது இரண்டு கெட்அப்பா என்பது இப்போது வரை சஸ்பென்ஸ்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;