கமல் படத்திற்கு டைட்டில் பாபநாசமா?

கமல் படத்திற்கு டைட்டில் பாபநாசமா?

செய்திகள் 7-Aug-2014 4:35 PM IST VRC கருத்துக்கள்

கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 2 நாட்களில் முடிந்து விடும் என்று இன்று காலை நடந்த ‘சிகரம் தொடு’ ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார் கமல்ஹாசன். இந்தப் படத்தை தொடர்ந்து கமல், ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் ‘திருசியம்’ ரீ-மேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ’பாபநாசம்’ என்று டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் திருநெல்வேலி பின்னணியில் எடுக்கப்படவிருப்பதாகவும், படத்தில் கமல் நெல்லை தமிழில் பேசி நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மலையாள ‘திருசியம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் தான் கன்னட ரீ-மேக்கிலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவர் தான் தமிழ் ரீ-மேக்கிலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது முடிவாகியுள்ளது. இதனை படத்தின் இயக்குனர் ஜித்து ஜோசஃபே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். மலையாளத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஹிட் அடித்த ‘திருசியம்’ தமிழிலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;