இசைக்கு கமல்... டிரைலருக்கு தனுஷ்!

இசைக்கு கமல்... டிரைலருக்கு தனுஷ்!

செய்திகள் 7-Aug-2014 1:14 PM IST Inian கருத்துக்கள்

விக்ரம் பிரபு முதல் முறையாக போலீஸ் வேடமிட்டு நடித்திருக்கும் ‘சிகரம் தொடு’ படத்தை யுடிவி நிறுவனம் தயாரித்திருக்கிறது. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மோனல் கஜார் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் ‘தூங்கா நகரம்’ கௌரவ். இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் இன்று (7-8-2014) காலை சென்னை சத்யம் திரையரங்கில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டது. இந்த பிரம்மாண்ட விழாவில் உலகநாயகன் கமல், தனுஷ், சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரபு, படத்தின் நாயகன் விக்ரம் பிரபு, நாயகி மோனல் கஜார், இசையமைப்பாளர் டி.இமான், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், பாடகர் ஜேசுதாஸ் உட்பட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட அதனைப் பெற்றுக் கொண்டார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். அதேபோல் ‘சிகரம் தொடு’ படத்தின் டிரைலரை தனுஷ் வெளியிட அதனை பாடகர் ஜேசுதாஸ் பெற்றுக் கொண்டார். இப்படத்தில் அப்பா சம்பந்தமான பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறாராம் ஜேசுதாஸ். அப்பா, மகன் சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையம்சத்துடன் கூடிய குடும்பச் சித்திரமாம் இந்த ‘சிகரம் தொடு’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;