வெற்றிமாறன், தனுஷின் சூதாடி!

வெற்றிமாறன், தனுஷின் சூதாடி!

செய்திகள் 7-Aug-2014 11:32 AM IST VRC கருத்துக்கள்

‘ஆடுகளம்’ படத்தைத் தொடர்ந்து தனுஷும், வெற்றிமாறனும் இணையும் படத்திற்கு ‘சூதாடி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்தை தனுஷின் ‘வுண்டர் பார்’ நிறுவனம் தயாரிக்க, இப்படத்தில் தனுஷுடன் பார்த்திபனும், பசுபதியும் நடிக்கிறார்கள்! இப்படத்திற்கான ஹீரோயின் மற்றும் இசை அமைப்பாளர் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. அதே நேரத்தில் தனுஷ் ஹிந்தியில் நடிக்கும் ‘ஷமிதாப்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. பால்கி இயக்கி வரும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஃபிப்ரவரி 6-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;