பைக் ரேஸர்ளுக்கு எச்சரிக்கை விடுக்கும் படம்!

பைக் ரேஸர்ளுக்கு எச்சரிக்கை விடுக்கும் படம்!

செய்திகள் 7-Aug-2014 10:43 AM IST Inian கருத்துக்கள்

'ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்' தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘இரும்புக்குதிரை’. அதர்வா, ப்ரியாஆனந்த், ராய்லக்‌ஷ்மி, 'ஏழாம் அறிவு' பட வில்லன் ஜானி ட்ரிங்யென் ஆகியோருடன் இந்தியாவின் முதல் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனை அலிஷா அப்துல்லாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை யுவராஜ்போஸ் இயக்கியுள்ளார். படம் குறித்து இயக்குனர் யுவராஜ்போஸ் கூறியதாவது,

‘‘ஒரு சிக்னல் மீறி போவதால் ஏற்படும் விளைவு, அதனால் கதாநாயகன் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் தான் படத்தின் கதை. இத்தாலியில் அதர்வா டுகாட்டி பைக் ஓட்ட ட்ரைனிங் எடுத்தப் பிறகுதான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படம் பிடித்தோம். பைக் ரேஸ் பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கையும் அதே நேரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு படமாக இது இருக்கும். படத்தில் வசனங்கள் மிகவும் குறைவு. ரீ-ரெக்கார்டிங் முக்கியத்துவம் பெற்ற படமாக இருக்கும். வித்தியாசமான முறையில் இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;